சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு, அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக அந்திப்பயிலகம் என்ற மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.
திருச்சியிலும், விருத்தாசலத்திலும் அந்திப்பயிலகங்கள் நடத்தப்படுகின்றன, மாணவர்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும், தமிழர் அறத்தையும் வழங்குகிறோம்.



